Versions
TOV அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
IRVTA அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திலோ இடதுபக்கத்திலோ விலகி, வாலிபர்களில் ஒருவனைப் பிடித்து அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
ERVTA அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, "என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்" என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை.
RCTA அப்நேர் அவனை நோக்கி, "நீ வலப்பக்கமாவது இடப்பக்கமாவது விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்துக் கொள்ளையிடு" என்றான். அசாயேலோ அவனை விட்டு விட மனதின்றி அவனை விடாது துரத்தினான்.
ECTA உன் வலமோ இடமோ விலகி இளைஞருள் ஒருவனை பிடித்து, அவன் உடைமைகளை பிடுங்கிக் கொள் "என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால் அசாவேலுக்கு அவனை பின்தொடர்வதிலிருந்து விலகிவிட மனம் இல்லை.