Versions
TOV மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
IRVTA {கொரிந்தியர்கள் மீதான பவுலின் கரிசனை} PS மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
ERVTA நான் முட்டாளைப் போன்று பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன்.
RCTA இப்படிப் பேசுவது அறிவீனமே; நீங்களே என்னை இப்படிப் பேச வைத்தீர்கள். நீங்களே எனக்கு நற்சான்று தந்திருக்கவேண்டும். நான் ஒன்றுமில்லை எனினும், அந்தப் பேர்போன அப்போஸ்தலர்களுக்கு நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன்.
ECTA நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன். என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள். நான் ஒன்றுமில்லை. எனினும் அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல.