Versions
TOV அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
IRVTA அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
ERVTA ஆனால் ரப்சாக்கே அவர்களிடம், "எனது ஆண்டவன் உங்களிடமும் உங்கள் அரசரிடமும் மட்டும் பேச அனுப்பவில்லை. சுவருக்கு மேலேயுள்ள ஜனங்களுடனும் நான் பேசுகிறேன்! அவர்கள் உங்களோடு தங்கள் மலத்தைத் தின்று சிறுநீரைக் குடித்துக்கொள்வார்கள்!". என்றான்.
RCTA அதற்கு ரப்சாசேசு, "என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவனோடும் உங்களோடும் இவ்வாறு பேசவா? இல்லை. உங்களோடு தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிற்சுவரில் இருக்கிற மனிதரிடம் பேசவே என்னை அனுப்பினார்" என்றான்.
ECTA அதற்கு அவன் அவர்களிடம், "என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடித்து உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும்" என்றான்.