Bible Versions
Bible Books

2 Samuel 20:17 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
IRVTA   அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
ERVTA   யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம்," நீர் யோவாபா?" என்று கேட்டாள். யோவாப், "ஆம் நானே" என்று பதில் கூறினான். அப்போது அப்பெண்மணி, "நான் கூறுவதைக் கேள்" என்றாள். யோவாப், "நான் கேட்கிறேன்" என்றான்.
RCTA   அவன் அவள் அண்டை வந்த போது அப்பெண், "யோவாப் என்பவர் நீர்தானா?" என்று வினவினாள். அவன், "நான் தான்" என்று பதில் உரைத்தான். அப்பொழுது அவள், "அடியாள் சொல்லப் போகிறதை நீர் கவனித்துக் கேட்பீரா?" என்று கேட்டாள். அதற்கு அவள், "கேட்கிறேன்" என்றான்.
ECTA   அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, "யோவாபு நீர் தாமா? என்றாள். "நானேதான் "என்றார் யோவாபு. "உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும்" என்றாள் அப்பெண். "கேட்கிறேன்" என்றார். யோவாபு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us