Versions
TOV ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
IRVTA மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக.
ERVTA ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள். குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள். தங்களது படுக்கை அறையிலிருந்து புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும்.
RCTA மக்களைக் கூட்டுங்கள். பரிசுத்த சபையை ஒன்று சேருங்கள், முதியோரைத் திரட்டுகள், சிறுவர்களைக் கூப்பிடுங்கள். பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒன்று கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும், மணமகள் தன் மணமஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
ECTA மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.