Bible Versions
Bible Books

1 Samuel 16:12 (GNTERP) Textus Receptus Greek New Testament

Versions

TOV   ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.
IRVTA   ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார்.
ERVTA   ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய மகனை அழைப்பித்தான். இந்த மகன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான். கர்த்தர் சாமுவேலிடம், "எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்" என்றார்.
RCTA   இசாயி ஆள் அனுப்பி அவனை அழைத்துவரச் செய்தான். அவனோ சிவந்த மேனியும், பார்வைக்கு அழகும், முகப்பொலிவும் உள்ளவனாய் இருந்தான். அப்பொழுது ஆண்டவர், "இவன் தான்; எழுந்து இவனை அபிஷுகம் செய்" என்று சொன்னார்.
ECTA   ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், "தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us