Versions
TOV அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
IRVTA அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ERVTA மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள்.
RCTA அவர்கள் வந்தபின் அவர் அவர்களிடம் பேசிய மொழிகள் இவை: "நான் ஆசியாவிற்கு வந்த நாள்முதல் எப்போதும் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
ECTA அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது; "நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.