Bible Versions
Bible Books

2 Samuel 15:32 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.
IRVTA   தாவீது மலையின் உச்சிவரை வந்து, அங்கே தேவனைத் தொழுதுகொண்டபோது, இதோ, அற்கியனான ஊசாய் தன்னுடைய ஆடையைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாக அவனுக்கு எதிராக வந்தான்.
ERVTA   தாவீது மலையின் உச்சிக்கு வந்தான். இங்கு அவன் அடிக்கடி தேவனை தொழுதுகொள்ள வந்திருக்கின்றான். அப்போது அற்கியனாகிய ஊசாய் அவனிடம் வந்தான். அவன் அங்கி கிழிந்திருந்தது. தலையில் புழுதி இருந்தது.
RCTA   ஆண்டவரை வழிபட வேண்டிய மலையின் உச்சிக்குத் தாவீது ஏறிப்போகையில், இதோ கிழிந்த ஆடையுடனும் புழுதி படிந்த தலையுடனும் அரக்கித் ஊரானான கூசாயி அவரை எதிர் கொண்டு வந்தான்.
ECTA   மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத்; தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழுதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us