Bible Versions
Bible Books

2 Samuel 15:34 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன் நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.
IRVTA   நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய வேலைக்காரனாக இருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு வேலைக்காரனாக இருந்தேன்; இப்போது நான் உமக்கு வேலைக்காரன் என்று சொன்னால், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை பயனற்றுப் போகும்படிச் செய்வாய்.
ERVTA   ஆனால் நீ எருசலேமுக்குத் திரும்பிப் போனால் அகித்தோப்பேலின் அறிவுரை பயனற்றுப் போகும்படி நீ செய்யலாம். அப்சலோமிடம் அரசனே, நான் உங்கள் பணியாள். நான் உங்கள் தந்தைக்கு சேவை செய்தேன். இப்போது உங்களுக்கு சேவை செய்வேன்" என்று கூறு.
RCTA   மாறாக நீ நகருக்குத் திரும்பிப் போய், அப்சலோமை நோக்கி: 'அரசே, நானும் உம்முடைய ஊழியன்தான். முன்பு நான் உம் தந்தைக்கு ஊழியனாய் இருந்தது போல் இப்போது உமக்கும் ஊழியனாய் இருப்பேன்' என்று சொல்வாயாகில், நீ அக்கித்தோபேலின் திட்டத்தை அழித்து விடுவாய்.
ECTA   ஆனால் நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம் அரசே உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்தது போலவே இனி உமக்கும் பணியானாக இருப்பேன் எனச் சொல்லி எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us