Bible Versions
Bible Books

Song of Solomon 8:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
IRVTA   நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,
என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்;
நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும்,
என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
ERVTA   நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். என் தாய் எனக்குக் கற்பித்த அறைக்கும் அழைத்துச் செல்வேன். நான் உமக்கு மாதளம் பழரசத்தைக் குடிக்கக் கொடுப்பேன். கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும் கொடுப்பேன்.
RCTA   உம்மை என் தாய்வீட்டுக்கு- என்னைக் கருத்தாங்கிப் பெற்றவளின் அறைக்குள் கூட்டிக் கொண்டு வருவேன். வாசனை கலந்த இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன், என் மாதுளம் பழச் சாற்றைப் பருகத் தருவேன்.
ECTA   உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்; எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்; மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்; என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us