Bible Versions
Bible Books

1 Chronicles 29:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான்.
IRVTA   இப்போதும் உங்களில் இன்றையதினம் யெகோவாவுக்குத் தன்னுடைய கைக்காணிக்கைகளைச் செலுத்த மனபூர்வமானவர்கள் யார் என்றான்.
ERVTA   தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
RCTA   மற்றும் பொன், வெள்ளி வேலைகளுக்கு வேண்டிய பொன்னும் வெள்ளியும் தருகிறேன். இவ்வேலைகள் எல்லாம் திறமை பெற்ற தட்டார்களால் செய்யப்பட வேண்டும். எவனும் ஆண்டவருக்குக் காணிக்கை தர விரும்பினால், இன்றே அவன் தனக்கு விருப்பமானதைத் தன் கைநிறையக் கொணர்ந்து ஆண்டவருக்குச் செலுத்தக் கடவான்" என்றார்.
ECTA   மற்றும் திறன் மிக்க கைவினைஞரால் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிக்காக பொன் வேலைக்காகப் பொன்னும், வெள்ளி வேலைக்காக வெள்ளியும் தருகிறேன். இன்று இப்பணிக்கெனத் தம் கையிலிருந்து தாராளமாக ஆண்டவருக்குக் கொடுப்பது வேறு யார்?" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us