Bible Versions
Bible Books

1 Kings 15:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
IRVTA   தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.
ERVTA   அவன் தனது பாட்டியான மாகாவையும், அரசி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான்.
RCTA   அன்றியும் ஆசாவின் தாய் மாக்கா, பிரியாப் என்ற சிலைக்கு ஒரு தோப்பை நேர்ந்துவிட்டு, அங்கே அதற்குச் செலுத்தப்பட்ட பலிகளை நடத்தி வந்தாள். அது நடவாதவாறு ஆசா அவளை நீக்கிவிட்டு கோயிலை இடித்து அதனுள் இருந்த அந்த அருவருப்பான சிலையைத் தவிடுபொடியாக்கிக் கெதிரோன் நதிக்கரையில் அதைச் சுட்டெரித்தான்.
ECTA   மேலும் அவனுடைய தாய் மாக்கா அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றைச் செய்து வைத்திருந்தாள். எனவே அவன் அவளை அரச அன்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவ்வுருவத்தைத் தகர்த்து கிதரோன் ஓடையருகே சுட்டெரித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us