Bible Versions
Bible Books

1 Thessalonians 2:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
IRVTA   {பவுல் தெசலோனிக்கேயர்களைக் காண விரும்புதல்} PS சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம்.
ERVTA   சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம்.
RCTA   சகோதரர்களே, சிறிதுகாலம் உங்களை விட்டுப் பிரிந்து தவித்தோம் - உடலால் மட்டுமே பிரிந்திருந்தோம். உள்ளத்தால் பிரிந்திருக்கவில்லை - உங்கள் முகத்தைப் பார்க்க மிக்க ஆவலாய் ஏங்கி இருந்தோம்.
ECTA   அன்பர்களே! நாங்கள் உள்ளத்தால் அல்ல, உடலால் மட்டுமே உங்களை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து தவித்தோம். உங்கள் முகத்தைக் காண பேராவலோடு ஏங்கியிருந்தோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us