Bible Versions
Bible Books

2 Chronicles 2:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பரநூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
IRVTA   இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணர்களோடு, பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைசெய்வதில் நிபுணனும், கொத்துவேலை செய்யத்தெரிந்த ஒரு மனிதனை என்னிடத்திற்கு அனுப்பும்.
ERVTA   "இப்போது நான் உங்களிடம் ஒரு மனி தனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலைகளில் திறமை இருக்கவேண்டும் அவனுக்கு இரத் தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இங்கு யூதாவிலும் எருசலேமிலும் இருக்கின்றவர்களோடும் என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடும் வேலைச்செய்ய வேண்டும்.
RCTA   ஆகவே கற்றறிந்த ஒரு கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதாநூல், சிவப்புநூல், இளநீலநூல் ஆகியவற்றிலும் வேலைசெய்யும் நிபுணனாகவும் சித்திர வேலை தெரிந்தவனாகவும் இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், என்னோடு யூதாவிலும் யெருசலேமிலும் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்யவேண்டும்.
ECTA   ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us