Bible Versions
Bible Books

2 Samuel 7:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
IRVTA   நான் இஸ்ரவேலான என்னுடைய மக்களை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் * கோத்திரத்தின் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் மக்களுக்குள் உலாவி வந்த எந்த இடத்திலாவது ஏதாவது ஒரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?
ERVTA   தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை’.
RCTA   இஸ்ராயேல் மக்கள் எல்லாரோடும் நாம் பயணம் செய்து வந்தோம் அன்றோ? நம்முடைய மக்களாகிய இஸ்ராயேலை வழி நடத்த வேண்டும் என்று நாம் கட்டளையிட்டபொழுது எவ்விடத்திலேனும் நம் கோத்திரங்களில் ஒன்றைப் பார்த்து, "நீங்கள் நமக்குக் கேதுரு மரங்களால் ஓர் ஆலயத்தை ஏன் கட்டவில்லை?" என்று எப்போதாவது நாம் சொன்னதுண்டா?'
ECTA   இஸ்ரயேல் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன் அவர்களுள் எவரிடமாவது எனக்காக கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்? என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us