Bible Versions
Bible Books

Deuteronomy 27:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
IRVTA   யெகோவாவுக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்வார்களாக.
ERVTA   "பொய்த் தெய்வங்களைச் செய்து இரகசியமான இடத்தில் அதனை ஒளித்து வைப்பவன் சபிக்கப்பட்டவன். அந்த பொய்த் தெய்வங்கள் எல்லாம் சித்திரவேலைக்காரர்களால் மரத்தாலும் கல்லாலும் அல்லது உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலைகள். கர்த்தர் அவற்றை வெறுக்கின்றார்!’ என்று அவர்கள் சொல்லும்போது, "எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.
RCTA   ஆண்டவருக்கு வெறுப் பூட்டும் காரியமாகிய விக்கிரகத்தை, உளியால் கல்லைக் கொத்தியாவது மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் செய்து, அதை மறைவிடத்தில் வைத்திருக்கிற தொழிலாளிமேல் சாபம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக மக்களெல்லாரும்: ஆமென் என்று சொல்லக் கடவார்கள்.
ECTA   "ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும் ". உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக "அப்படியே ஆகட்டும்" என்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us