Bible Versions
Bible Books

Ezekiel 17:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன்.
IRVTA   யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாக இருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு மலையின்மேல் நாட்டுவேன்.
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்: ‘நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன். நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன். நானே அதனை உயரமான மலையில் நடுவேன்.
RCTA   ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளையொன்றை நாமே எடுப்போம்; அதன் நுனிக் கொப்புகளிலிருந்து இளங்கொழுந்து ஒன்றைக் கொய்து ஒங்கி உயர்ந்த மலை மேல் நாமே நாட்டுவோம்;
ECTA   தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us