Bible Versions
Bible Books

Ezekiel 6:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,
IRVTA   என்னை விட்டு கெட்டுபோகிற இருதயத்தைக்குறித்தும், தங்களுடைய அசுத்தமான சிலைகளின் பின்னே கெட்டு போகிற தங்களுடைய கண்களைக்குறித்தும் மனவேதனையடைந்தேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் அந்நியஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய எல்லா அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளுக்காக தங்களையே வெறுத்து,
ERVTA   பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார் கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர்.
RCTA   பிற நாட்டவரால் சிறைப்படுத்தப்பட்டு உங்களுள் உயிர் தப்பியவர்கள் நம்மை நினைத்துக்கொள்வார்கள்; ஏனெனில் நம்மை விட்டுச் சிலைகளைப் பின்தொடர்ந்து விபசாரம் செய்தவர்களின் கண்களும் இதயமும் வருந்தும்படி செய்தோம்; தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், கட்டிக்கொண்ட பாவங்கள் யாவற்றுக்காகவும், மனம் வருந்தித் தங்களைத் தாங்களே வெறுப்பார்கள்.
ECTA   இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us