Versions
TOV தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.
IRVTA மிகவும் தரித்திரரின் தலைப் பிள்ளைகள் * திருப்தியாகச் சாப்பிட்டு, எளியவர்கள் சுகமாகப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகும்படிசெய்வேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.
ERVTA ஆனால் எனது ஏழை ஜனங்கள் பாதுகாப்புடன் உணவு உண்பார்கள். அவர்களின் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பார்கள். எனது ஏழை ஜனங்கள் படுத்திருந்து பாதுகாப்பை உணர்வார்கள். ஆனால் உனது குடும்பத்தை நான் பட்டினியோடு கொல்வேன். மீதியுள்ள உனது ஜனங்கள் மடிந்துப் போவார்கள்.
RCTA எளியவர்களில் எல்லாம் எளியவர்கள் உணவு பெறுவர், ஏழைகள் நம்பிக்கையோடு இளைப்பாறுவர்; ஆனால் உன் இனத்தைப் பசியால் மடியச் செய்வோம், உன் சந்ததியில் எஞ்சியோரை நாசமாக்குவோம்.
ECTA ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்; வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்; உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் .