Versions
TOV உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய்.
IRVTA உன் மேய்ப்பர்கள் எல்லோரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்புக்காகவும் நீ வெட்கப்பட்டு அவமானமடைவாய்.
ERVTA யூதா, நான் தரும் தண்டனை ஒரு புயலைப்போன்று வரும். அது உங்கள் மேய்ப்பர்களை அடித்துச்செல்லும். சில அந்நியநாடுகள் உதவும் என்று நினைத்தாய். ஆனால் அந்நாடுகளும் தோற்கடிக்கப்படும். பிறகு நீ உண்மையிலேயே ஏமாறுவாய். நீ செய்த தீயவற்றுக்காக அவமானம் அடைவாய்.
RCTA உன்னுடைய மேய்ப்பர்களைக் கடுங்காற்றே மேய்த்து நடத்தும்; உன் அன்பர்கள் உன்னோடு அடிமைத் தனத்திற்குச் செல்வார்கள்; அப்போது நீ உன் கெடு மதியை எண்ணி வெட்கி நாணுவாய்.
ECTA உன் மேய்ப்பர்களைக் காற்றே மேய்க்கும்; உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்; அப்போது நீ வெட்கமுறுவாய். உன் தீச்செயல்களைக் குறித்து மானக்கேடு அடைவாய்.