Versions
TOV ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.
IRVTA ஒரு கூடையில் முதல் அறுவடையின் அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்ற கூடையில் சாப்பிடமுடியாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.
ERVTA ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அந்த அத்திப் பழங்கள் பருவத்தின் முதலில் பறித்த நல்லப் பழங்களாய் இருந்தன. ஆனால், அடுத்தக் கூடையில் அழுகிய பழங்கள் இருந்தன. அவை உண்ண முடியாத அளவிற்கு மிகவும் அழுகியதாக இருந்தன.
RCTA ஒன்றில் மிக நல்ல பழங்கள் இருந்தன; தக்க பருவத்தில் பழுத்த முதற் கனிகள் போல் இருந்தன. மற்றதில் இருந்த அத்திப்பழங்கள் மிக்க கெட்ட பழங்களாயிருந்தன; யாரும் தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தன.
ECTA ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன; அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன; அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.