Versions
TOV ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
IRVTA “ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது மகளாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
ERVTA "ஒருவன் தன் சகோதரியையோ, சகோதரி முறையுள்ளவளையோ மணந்து கொண்டு அவளோடு பாலின உறவு கொள்வது வெட்ககரமான பாவமாகும். அவர்கள் பொது ஜனங்கள் மத்தியில் தண்டிக்கப்படுவதுடன், மற்ற ஜனங்களிடமிருந்தும் தனியே பிரிக்கப்பட வேண்டும். ஒருவன் தன் சகோதரியோடு பாலின உறவு கொண்ட பாவத்துக்காக அவன் தண்டிக்கப்பட வேண்டும்.
RCTA தன் தந்தைக்கோ தாய்க்கோ பிறந்த மகளாகிய தன் சகோதரியோடு சேர்ந்து, அவன் அவளுடைய நிருவானத்தையும் அவள் அவனுடைய நிருவாணத்தையும் பார்த்திருந்தால், அவர்கள் அடாத பாதகத்தைக் கட்டிக்கொண்டவர்கள் ஆவார்கள். அவ்விருவரும் ஒருவர் மற்றொருவர்க்குத் தம் நிருவாணத்தைக் காட்டினமையால் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாகக் கொலை செய்யப்படுவார்கள். தங்கள் கொடுமையைத் தாங்களே சுமப்பார்கள்.
ECTA யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான்.