Versions
TOV அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப் போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
IRVTA அதின் வருமானம் எங்கள் பாவங்களினாலே நீர் எங்கள்மேல் நியமித்த ராஜாக்களுக்கு அதிகமாக போகிறது; அவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் எங்களுடைய சரீரங்களையும் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் கொடிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
ERVTA இந்நாட்டின் அறுவடை மிகப் பெரியது. ஆனால் நாங்கள் பாவம் செய்தோம். எனவே அறுவடை, எங்களை ஆள உம்மால் நியமிக்கப்பட்ட அரசர்களுக்கு சொந்தமாயிற்று. அந்த அரசர்கள் எங்களையும் எங்கள் ஆடு மாடுகளையும் ஆளுகிறார்கள். அவர்கள் விரும்புகிறபடி எதையும் செய்கிறார்கள். நாங்கள் மிகுந்த இக்கட்டில் உள்ளோம்.
RCTA இதன் நல்ல விளைச்சலோ எங்கள் பாவங்களின் காரணமாக எங்களைக் கீழ்ப்படுத்தும்படி நீர் ஏற்படுத்தி உள்ள அரசர்களுக்கே பயன்படுகிறது. அவர்களோ தங்கள் விருப்பம் போல் எம் உடல்களையும் எம் கால்நடைகளையும் ஆட்டிப்படைக்கிறார்கள். அதனால் நாங்கள் பெருந் துன்பக் கடலிலில் அமிழ்ந்தி உழல்கின்றோம்" என்று மன்றாடினார்கள்.
ECTA எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.