Versions
TOV எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிராயணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள்.
IRVTA எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும்.
ERVTA "ரூபனின் முகாமில் எல்லா கோத்திரங்களிலிருந்தும் மொத்தம் 1,51,450 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் போகும்போது இக்குழு இரண்டாவதாகச் செல்லும்.
RCTA ரூபனின் பளையத்தில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஒரிலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பயணத்தின் போது இவர்களே தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி இரண்டாவதாய்ச் செல்லக்கடவார்கள்.
ECTA இவ்வாறாக ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது; இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர்.