Versions
TOV வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
IRVTA வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்;
உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ
தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
ERVTA சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.
RCTA கட்டளையைக் கைக்கொண்டொழுகுபவன் ஞானமுள்ள மகனாய் இருக்கிறான். ஆனால், பேருண்டியாளரைப் பேணுகிறவன் தன் தந்தையை மானபங்கப் படுத்துகிறான்.
ECTA அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரிகளோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.