Versions
TOV அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
IRVTA அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல, யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
ERVTA எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
RCTA இவர்கள் என் உயிரைக் காக்கத் தங்கள் தலையைக் கொடுக்கவும் முன் வந்தனர்; அவர்களுக்கு நான் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்; நான் மட்டுமன்று, புறவினத்தார் நடுவில் உள்ள சபைகள் அனைத்தும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.
ECTA அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.