Versions
TOV அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
IRVTA அப்பொழுது அவன் சீக்கிரமாகத் தன்னுடைய முகத்தின் மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.
ERVTA பிறகு அவன் தன் முகத்தில் உள்ள துணியை விலக்கவே, அரசனுக்கு அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பது தெரிந்தது.
RCTA உடனே அவர் தம் முகத்திலிருந்த சாம்பலைத் துடைக்க, இஸ்ராயேலின் அரசன் அவர் இறைவாக்கினரில் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.
ECTA உடனே அவர் தமது கண்கட்டை அவிழ்த்துக் கொள்ளவே, அரசன் அவர் இறைவாக்கினருள் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.