Bible Versions
Bible Books

1 Kings 20:9 (NCV) New Century Version

Versions

TOV   அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
IRVTA   அதினால் அவன் பெனாதாத்தின் தூதுவர்களை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்முறை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; தூதுவர்கள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
ERVTA   எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, "நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்" என்றான். பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான்.
RCTA   எனவே, ஆக்காப் பெனாதாத்தின் தூதுவரை நோக்கி, "நீங்கள் அரசராகிய என் தலைவருக்கு, ' நீர் முதல் முறை உம் அடியானாகிய எனக்குச் சொல்லி அனுப்பிய யாவற்றையும் நான் செய்வேன். இம் முறை நீர் கேட்பவற்றை நான் செய்ய இயலாது' என்று சொல்லுங்கள்" என்றான்.
ECTA   அவன் பெனதாதின் தூதரை நோக்கி, "நீங்கள் அரசராகிய என் தலைவரிடம் சென்று, 'நீர் உம் அடியவனாகிய என்னிடம் முதல் முறை சொல்லியனுப்பியவாறு நான் யாவற்றையும் செய்து தருவேன். ஆனால் இம்முறை நீர் கேட்பவற்றை என்னால் தர முடியாது' என்று தெரிவியுங்கள்" என்றான். அத்தூதரும் திரும்பிச் சென்று இப்பதிலை அவனுக்குத் தெரிவித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us