Versions
TOV அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
IRVTA அவன் ராஜாவான என்னுடைய ஆண்டவனிடம் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவான என்னுடைய ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி செய்யும்.
ERVTA ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது அரசனாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள்.
RCTA அதுவுமின்றி, அவன் என் தலைவரும் அரசருமாகிய உம்மிடம் உம் அடியானைப் பற்றிப் பழி சொன்னான். என் தலைவராகிய அரசே, நீர் கடவுளின் தூதனைப் போல் இருக்கிறீரே. உமக்குப் பிடித்ததைச் செய்யும்.
ECTA அவனோ உம் அடியானைப் பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால் என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்படுவதையே செய்யும்.