Versions
TOV ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
IRVTA மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
ERVTA அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.
RCTA அரசரும் எல்லா மக்களும் யோர்தானைக் கடந்தபிறகு அரசர் பெர்செல்லாயியை முத்தமிட்டு அவனுக்கு ஆசீர் அளித்தார். பிறகு பெர்செல்லாயி தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.
ECTA பிறகு, மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோத்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்கு திரும்பினார்.