Versions
TOV பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.
IRVTA பர்சிலா எண்பது வயது முதியவனாக இருந்தான்; ராஜா மகனாயீமிலே தங்கியிருக்கும்வரை அவனைப் பராமரித்துவந்தான்; அவன் மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான்.
ERVTA பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது.
RCTA இந்தக் கலாத்திய பெர்செல்லாயி மிகவும் வயது முதிர்ந்தவன்; அவனுக்கு வயது எண்பது. அரசர் பாளையத்தில் தங்கியிருக்கும்வரை, அவன் அவருக்கு உணவு முதலியன கொண்டு வந்து கொடுப்பான். ஏனெனில் அவன் பெருஞ் செல்வம் படைத்தவன்.
ECTA பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்; எண்பது வயதினர்; பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்த போது அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டவர்.