Bible Versions
Bible Books

1 Chronicles 9:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரண்டுபேராயிருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்கள் வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்கள் வேலைகளில் வைத்தார்கள்.
IRVTA   வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரெண்டுபேர்களாக இருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்களுடைய வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், தரிசனம்காண்கிறவனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்களுடைய வேலைகளில் வைத்தார்கள்.
ERVTA   பரிசுத்தக் கூடாரவாசலைக் கண்காணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 212 அவர்களின் பெயர்கள் சிறு நகரங்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. நம்பிக்கைக்கு உரிய அவர்களை தாவீதும் சீயர் ஆகிய சாமுவேலும் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.
RCTA   கதவுகள் தோறும் காவல் புரியத் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலே தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள். தாவீதும் திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை நம்பி அந்தந்த வேலைகளில் அமர்த்தினர்.
ECTA   நுழைவாயில்களைக் காப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு பேர். இவர்கள் தங்கள் சிற்றூர்களில் தலைமுறை அட்டவணைப்படி பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்ததால், தாவீதும், திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை இப்பணியில் அமர்த்தினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us