Bible Versions
Bible Books

Amos 5:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்.
IRVTA   நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீதியாக இருப்பார்கள் என்று யெகோவாகிய தேவன் சொல்லுகிறார்.
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: "1000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள், 100 ஆட்களோடு திரும்பி வருவார்கள், 100 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்."
RCTA   ஏனெனில், ஆண்டவராகிய இறைவன் இவ்வாறு கூறுகிறார்: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரத்தில் நூறு பேரே எஞ்சியிருப்பர், நூறு பேரை அனுப்பிய பட்டணத்தில், பத்தே பேர் எஞ்சியிருப்பர்; இஸ்ராயேல் வீட்டார் கதி இதுவே."
ECTA   ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் நூறு பேரே எஞ்சியிருப்பர்; நூறு பேரை அனுப்பிய நகரில் பத்துப் பேரே எஞ்சியிருப்பர்; இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us