Bible Versions
Bible Books

Exodus 15 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
IRVTA   {மோசே மற்றும் மிரியாம் பாடின பாடல்} PS அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு:
யெகோவாவைப் பாடுவேன்;
“அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்;
குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
ERVTA   அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்: "நான் கர்த்தரைப் பாடுவேன்! அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார், அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார்.
RCTA   அப்பொழுது மோயீசன் இஸ்ராயேல் மக்களோடுகூட ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய சங்கீதமாவது: ஆண்டவருக்குப் பாட்டுப் பாடுவோம். ஏனென்றால் அவர் பெரும்புகழோடு வெற்றியில் சிறந்தார்; குதிரையையும் அதன்மேல் ஏறியிருந்த வீரனையும் கடலிலே வீழ்த்தினார்.
ECTA   அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us