Bible Versions
Bible Books

Hosea 2:18 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன்.
IRVTA   அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களுடனும், ஆகாயத்துப் பறவைகளுடனும், பூமியிலே ஊரும் பிராணிகளுடனும், ஒரு உடன்படிக்கைசெய்து, வில்லையும் பட்டயத்தையும் போரையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாகப் படுத்துக்கொண்டிருக்கச்செய்வேன்.
ERVTA   "அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இலலாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன்.
RCTA   அந்நாளில்- வயல்வெளி மிருகங்களோடும், வானத்துப் பறவைகளோடும் நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவளுக்காக நாம் ஓர் உடன்படிக்கை செய்வோம்; வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்றே நாம் அகற்றிவிட்டு, அவளை அச்சமின்றி ஒய்ந்திருக்கச் செய்திடுவோம்.
ECTA   அந்நாளில், காட்டு விலங்குகளோடும், வானத்துப் பறவைகளோடும், நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவர்களுக்காக நான் ஓர் உடன்படிக்கை செய்வேன்; வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்று அகற்றிவிடுவேன்; அச்சமின்றி அவர்கள் படுத்திருக்கச் செய்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us