Bible Versions
Bible Books

Judges 12:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
IRVTA   அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
ERVTA   இப்சானுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தனர். அவனுக்கு உறவினரல்லாத 30 பேரைத் திருமணம் செய்யுமாறு அவன் தனது மகள்களுக்குக் கூறினான். அவன் உறவினரல்லாத 30 பெண்களைத் தேர்ந்தெடுத்தான். அவனது மகன்கள் அவர்களைத் திருமணம் செய்தனர். இப்சான் 7 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.
RCTA   அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வெளி இடங்களில் மணம் முடித்துக் கொடுத்தார்; அதே போன்று வெளியிடத்துப் பெண்களைத் தம் புதல்வர்க்கு மணம் முடித்து வைத்தார். அவர் இஸ்ராயேலுக்கு ஏழு ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
ECTA   அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார். வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார். அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us