Bible Versions
Bible Books

Psalms 72:17 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
IRVTA   அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்;
சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்;
மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்,
எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.
ERVTA   அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும். சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும். ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும். அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
RCTA   அவரது பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக: கதிரோன் இருக்கும் வரை அவரது பேரும் புகழும் நிலைப்பதாக. அவர் வழியாய்ப் பூவுலக இனத்தார் அனைவரும் ஆசி பெறுவர். மக்கள் இனத்தார் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றிப் புகழ்வர்.
ECTA   அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us