Versions
TOV தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
IRVTA தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான். சவுலும், எந்நோரின் குறி சொல்லும் பெண்ணும் PEPS
ERVTA தாவீது, "உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!" என்றான். ஆகீஸும், "நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்" என்றான்.
RCTA அதற்குத் தாவீது, "அப்படியானால் உம் ஊழியன் செய்யப்போகிறதை விரைவில் அறிந்து கொள்வீர்" என்று சொன்னான். அப்பொழுது ஆக்கீசு தாவீதை நோக்கி, "இதற்காக நான் உன்னை எந்நாளும் என் மெய்க்காவலனாக ஏற்படுத்துவேன்" என்று சொன்னான்.
ECTA அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, "மிக நல்லது உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர்" என்றார். ஆக்கிசு தாவீதிடம், "எனக்கு என்றும் மெய்க்காப்பாளராய் இருக்ககும்படி உம்மை நான் நியமிக்கிறேன்" என்று சொன்னார்.