Versions
TOV அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
IRVTA அவனோ அதை மறுத்து, நான் சாப்பிடமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரர்களும் அந்த பெண் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
ERVTA ஆனால் சவுல், "நான் உண்ண மாட்டேன்" என மறுத்துவிட்டான். சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான் தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான்.
RCTA அவர் தடுத்து, "சாப்பிட மாட்டேன்" என்றார். ஆனால் அவர் ஊழியர்களும் அப்பெண்ணும் அவரை மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டதனால் கடைசியாய் அவர் அவர்கள் வார்த்தையைக் கேட்டுத் தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
ECTA அதற்கு அவர் "நான் உண்ண மாட்டேன்" என்று மறுத்தார். ஆனால் அப்பெண்ணுடன் சேர்ந்து அவருடைய பணியாளர்கள் வற்புறுத்தவே அவர் அவர்களது சொல்லுக்கு இசைந்தார்; அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.