Versions
TOV இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளைவிட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
IRVTA இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும்.
ERVTA நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன். அக்கிளை மரமாக வளரும். அது கிளைகளாக வளர்ந்து கனிதரும். அது அழகான கேதுரு மரமாகும். பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும். பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.
RCTA இஸ்ராயேல் என்னும் உயர்ந்த மலை மீது நாம் அதை நாட்டுவோம்; அது கிளைத்து வளர்ந்து கனிதரும் பெரிய கேதுரு மரமாகும்; பறப்பன யாவும் அதன்கீழ் வந்தடையும்; எல்லா வகையான பறவைகளும் அதன் இலைகளின் நிழலில் வந்து கூடு கட்டும்.
ECTA இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.