Versions
TOV அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.
IRVTA அவனுடைய வேலைக்காரர்கள் எல்லாரும், கிரேத்தியர்கள் யாவரும், பிலேத்தியர்கள் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாக வந்த அறுநூறுபேர்களான கித்தியர்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.
ERVTA தன் அதிகாரிகள் எல்லோரும் அரசன் அருகே நடந்தனர். கிரேத்தியர், பிலேத்தியர், கித்தியர், (காத்திலிருந்து வந்த 600 பேர்) எல்லோரும் அருகே நடந்தார்கள்.
RCTA அவருடைய ஊழியர் எல்லாரும் அவருக்குப் பக்கத்தே நடந்து போனார்கள். கெரேத்தியருடையவும் பெலாத்தியருடையவும் சேனைகளும், கேத்திலிருந்து வந்திருந்த ஆற்றல் வாய்ந்த அறுநூறு கேத்தைய வீரர்களும் அரசருக்குமுன் நடந்து போனார்கள்.
ECTA அவர் தம் அனைத்து அலுவலர்களும் அவர் முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர் பின் வந்த அறுநூறு பேர் கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.