Versions
TOV அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
IRVTA அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான்.
ERVTA ஒருவன் தாவீதிடம், "அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்" என்றான். அப்போது தாவீது, "கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்" என்று ஜெபம் செய்தான்.
RCTA அக்கித்தோபேலும் அப்சலோமோடு சேர்ந்து கொண்டு சதி செய்தான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்ட போது தாவீது, "ஆண்டவரே, அக்கித்தோபேலின் திட்டத்தை மடமையாக மாற்றியருளும்" என்று மன்றாடினார்.
ECTA அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்ட போது, தாவீது, ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக! என்றார்.