Bible Versions
Bible Books

:

TOV
1. கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
1. Why H4100 standest H5975 thou afar off H7350 , O LORD H3068 ? why hidest H5956 thou thyself in times H6256 of trouble H6869 ?
2. துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
2. The wicked H7563 in his pride H1346 doth persecute H1814 the poor H6041 : let them be taken H8610 in the devices H4209 that H2098 they have imagined H2803 .
3. துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
3. For H3588 the wicked H7563 boasteth H1984 of H5921 his heart H5315 's desire H8378 , and blesseth H1288 the covetous H1214 , whom the LORD H3068 abhorreth H5006 .
4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
4. The wicked H7563 , through the pride H1363 of his countenance H639 , will not H1077 seek H1875 after God : God H430 is not H369 in all H3605 his thoughts H4209 .
5. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார் மேலும் சீறுகிறான்.
5. His ways H1870 are always H3605 H6256 grievous H2342 ; thy judgments H4941 are far above H4791 out of his sight H4480 H5048 : as for all H3605 his enemies H6887 , he puffeth H6315 at them.
6. நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
6. He hath said H559 in his heart H3820 , I shall not H1077 be moved H4131 : for I shall never H1755 H1755 H834 H3808 be in adversity H7451 .
7. அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
7. His mouth H6310 is full H4390 of cursing H423 and deceit H4820 and fraud H8496 : under H8478 his tongue H3956 is mischief H5999 and vanity H205 .
8. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக் கொண்டிருக்கிறது.
8. He sitteth H3427 in the lurking places H3993 of the villages H2691 : in the secret places H4565 doth he murder H2026 the innocent H5355 : his eyes H5869 are privily set H6845 against the poor H2489 .
9. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
9. He lieth in wait H693 secretly H4565 as a lion H738 in his den H5520 : he lieth in wait H693 to catch H2414 the poor H6041 : he doth catch H2414 the poor H6041 , when he draweth H4900 him into his net H7568 .
10. திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.
10. He croucheth H1794 , and humbleth H7817 himself , that the poor H2489 may fall H5307 by his strong ones H6099 .
11. தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக் கொள்ளுகிறான்.
11. He hath said H559 in his heart H3820 , God H410 hath forgotten H7911 : he hideth H5641 his face H6440 ; he will never H1077 H5331 see H7200 it .
12. கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
12. Arise H6965 , O LORD H3068 ; O God H410 , lift up H5375 thine hand H3027 : forget H7911 not H408 the humble H6035 .
13. துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?
13. Wherefore H5921 H4100 doth the wicked H7563 contemn H5006 God H430 ? he hath said H559 in his heart H3820 , Thou wilt not H3808 require H1875 it .
14. அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
14. Thou hast seen H7200 it ; for H3588 thou H859 beholdest H5027 mischief H5999 and spite H3708 , to requite H5414 it with thy hand H3027 : the poor H2489 committeth H5800 himself unto H5921 thee; thou H859 art H1961 the helper H5826 of the fatherless H3490 .
15. துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
15. Break H7665 thou the arm H2220 of the wicked H7563 and the evil H7451 man : seek out H1875 his wickedness H7562 till thou find H4672 none H1077 .
16. கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
16. The LORD H3068 is King H4428 forever H5769 and ever H5703 : the heathen H1471 are perished H6 out of his land H4480 H776 .
17. கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
17. LORD H3068 , thou hast heard H8085 the desire H8378 of the humble H6035 : thou wilt prepare H3559 their heart H3820 , thou wilt cause thine ear H241 to hear H7181 :
18. மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
18. To judge H8199 the fatherless H3490 and the oppressed H1790 , that the man H582 of H4480 the earth H776 may no H1077 more H3254 H5750 oppress H6206 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×