Bible Versions
Bible Books

Isaiah 36:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.
IRVTA   அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாக்கும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியமொழியிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களுடன் யூதமொழியிலே * எபிரேய மொழியில் பேசவேண்டாம் என்றார்கள்.
ERVTA   எருசலேமிலிருந்து வந்த எலியாக்கீம், செப்னா, யோவாக் ஆகியோர் தளபதியிடம், தயவுசெய்து எங்களோடு அரமேய மொழியில் பேசுங்கள். எங்களோடு எங்கள் யூத மொழியில் பேசாதீர்கள். நீங்கள் யூத மொழியைப் பயன்படுத்தினால், நகர சுவர்களுக்குமேல் இருக்கிற ஜனங்கள் நீங்கள் பேசுவதைப் புரிந்துகொள்வார்கள்" என்று சொன்னார்கள்.
RCTA   அப்போது எலியாசின், சொப்னா, யோவாஹே என்பவர்கள் இரப்சாசேசை நோக்கி, "உம்முடைய ஊழியர்களான எங்களிடத்தில் சீரியா மொழியில் (அரமாயிக் மொழியில்) பேசும்; ஏனெனில் அது எங்களுக்குத் தெரியும். ஆனால், மதிலின் மேல் இருக்கும் மக்களுக்குக் கேட்கும்படி யூத மொழியில் (எபிரேய மொழியில்) எங்களுடன் பேச வேண்டா" என்று கேட்டுக் கொண்டனர்.
ECTA   எலியாக்கிம், செபுனா, யோவாகு ஆகியோர் இரப்சாக்கேயை நோக்கி, "உம் பணியாளர்களான எங்களோடு தயைகூர்ந்து அரமேய மொழியில் பேசும்; நாங்கள் "புரிந்து கொள்வோம். எங்களிடம் யூதா நாட்டு மொழியில் பேசாதீர். சுவர்மேல் இருக்கும் ஆள்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us