Bible Versions
Bible Books

Isaiah 36:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகுமளவும், அவனவன் தன்தன் திராட்சச்செடியின் கனியையும், தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.
IRVTA   நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்திற்கு ஒப்பான தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போகும்வரைக்கும், அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும், தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்.
ERVTA   இதனை, உங்கள் தேசத்தைப்போன்ற நாட்டிற்கு நான் வந்து உங்களை அழைத்துச் செல்லும்வரை நீங்கள் செய்யலாம். அந்தப் புதிய நாட்டில் உங்களுக்கு நல்ல தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும் பெறுவீர்கள். அந்த நாட்டில் உணவும் திராட்சை வயல்களும் இருக்கும்.
RCTA   கோதுமையும் திராட்சை இரசமும் மிகுதியாய்க் கிடைப்பதும், அப்பமும் திராட்சையும் மலிந்திருப்பதுமான நாட்டுக்கு- உங்களைக் கொண்டு போகும் வரையில், நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் சொந்தத் தோட்டத்தையும் திராட்சைக் கனியையும், சொந்த அத்திமரத்தின் பழங்களையும் சாப்பிடுவீர்கள்; சொந்தக் கேணியின் தண்ணீரையும் பருகுவீர்கள்.
ECTA   நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற நாட்டிற்கு - தானியமும் திராட்சை இரசமும் மிகுதியாகக் கிடைப்பதும், உணவுப் பொருளும் திராட்சைத் தோட்டங்களும் ஏராளமாய் உள்ளதுமான நாட்டிற்கு - உங்களைக் கூட்டிச் செல்லும்வரை இது நடக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us