Bible Versions
Bible Books

Isaiah 15:2 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
IRVTA   அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மெதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
ERVTA   அரசனது குடும்பத்தினரும் தீபோனின் ஜனங்களும் அழுவதற்குத் தொழுதுகொள்கிற இடங்களுக்குப் போனார்கள். மோவாப்பின் ஜனங்கள் நேபோவுக்காகவும் மேதெபாவுக்காகவும் அழுதனர். ஜனங்கள் தம் தலைகளையும், தாடிகளையும் மழித்துக்கொண்டு அவர்கள் துக்கமாக இருப்பதாகக் காட்டினர்.
RCTA   அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்; நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்; தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும்.
ECTA   தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்; நெபோ, மேதாபா நகரங்களைக்குறித்து மோவாபு அலறி அழுகின்றது; அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us