Bible Versions
Bible Books

Jeremiah 6 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங்காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
IRVTA   {முற்றுகையிடப்பட்ட எருசலேம்} PS பென்யமீன் வம்சத்தாரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஒன்றாய்க்கூடி ஓடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சம் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா அழிவும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
ERVTA   பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள். எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்! தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்! பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்! நீங்கள் இவற்றை செய்யுங்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது. பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.
RCTA   பென்யமீன் மக்களே, யெருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தேக்குவாவில் எக்காளம் ஊதுங்கள்; பெத்தகாரமில் கொடியேற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து பெருந் தீமையும் அழிவும் எழும்பி வருகின்றன.
ECTA   பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்; பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us