|
|
1. {இஸ்ரயேல் இறைவனிடம் திரும்பவில்லை} PS ஏழைகளை ஒடுக்கி, வறியவரை நசுக்கும் பெண்களே, “எங்களுக்குக் குடிவகைகளைக் கொண்டுவாருங்கள்” என உங்கள் கணவர்களிடம் சொல்லுகிறவர்களே, இந்த வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் சமாரியா மலையிலுள்ள பாசானின் கொழுத்த பசுக்களைப்போல் இருக்கிறீர்கள்.
|
1. Hear H8085 this H2088 word H1697 , ye kine H6510 of Bashan H1316 , that H834 are in the mountain H2022 of Samaria H8111 , which oppress H6231 the poor H1800 , which crush H7533 the needy H34 , which say H559 to their masters H113 , Bring H935 , and let us drink H8354 .
|
2. எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்: “நிச்சயமாய் ஒரு காலம் வரும். அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும், உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும் தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.
|
2. The Lord H136 GOD H3069 hath sworn H7650 by his holiness H6944 , that H3588 , lo H2009 , the days H3117 shall come H935 upon H5921 you , that he will take you away H5375 H853 with hooks H6793 , and your posterity H319 with fishhooks H5518 H1729 .
|
3. நீங்கள் ஒவ்வொருவரும் சுவர் வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள். அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
3. And ye shall go out H3318 at the breaches H6556 , every H802 cow at that which is before H5048 her ; and ye shall cast H7993 them into the palace H2038 , saith H5002 the LORD H3068 .
|
4. “சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள். கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள். காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள்.
|
4. Come H935 to Bethel H1008 , and transgress H6586 ; at Gilgal H1537 multiply H7235 transgression H6586 ; and bring H935 your sacrifices H2077 every morning H1242 , and your tithes H4643 after three H7969 years H3117 :
|
5. புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள். உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி அவற்றைக்குறித்துப் புகழுங்கள், இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
|
5. And offer a sacrifice H6999 of thanksgiving H8426 with H4480 leaven H2557 , and proclaim H7121 and publish H8085 the free offerings H5071 : for H3588 this H3651 liketh H157 you , O ye children H1121 of Israel H3478 , saith H5002 the Lord H136 GOD H3069 .
|
6. “ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும், பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன். அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
6. And I H589 also H1571 have given H5414 you cleanness H5356 of teeth H8127 in all H3605 your cities H5892 , and want H2640 of bread H3899 in all H3605 your places H4725 : yet have ye not H3808 returned H7725 unto H5704 me, saith H5002 the LORD H3068 .
|
7. “அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில் நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன். நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி, இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன். ஒரு வயலுக்கு மழை பெய்தது. இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது.
|
7. And also H1571 I H595 have withheld H4513 H853 the rain H1653 from H4480 you , when there were yet H5750 three H7969 months H2320 to the harvest H7105 : and I caused it to rain H4305 upon H5921 one H259 city H5892 , and caused it not to rain H4305 H3808 upon H5921 another H259 city H5892 : one H259 piece H2513 was rained upon H4305 , and the piece H2513 whereupon H834 H5921 it rained H4305 not H3808 withered H3001 .
|
8. மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும், குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
8. So two H8147 or three H7969 cities H5892 wandered H5128 unto H413 one H259 city H5892 , to drink H8354 water H4325 ; but they were not H3808 satisfied H7646 : yet have ye not H3808 returned H7725 unto H5704 me, saith H5002 the LORD H3068 .
|
9. “பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன். நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன். உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன. அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
9. I have smitten H5221 you with blasting H7711 and mildew H3420 : when your gardens H1593 and your vineyards H3754 and your fig trees H8384 and your olive trees H2132 increased H7235 , the palmerworm H1501 devoured H398 them : yet have ye not H3808 returned H7725 unto H5704 me, saith H5002 the LORD H3068 .
|
10. “நான் எகிப்தில் செய்ததுபோல, உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன். உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன். அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்; கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
10. I have sent H7971 among you the pestilence H1698 after the manner H1870 of Egypt H4714 : your young men H970 have I slain H2026 with the sword H2719 , and have taken away H5973 H7628 your horses H5483 ; and I have made the stink H889 of your camps H4264 to come up H5927 unto your nostrils H639 : yet have ye not H3808 returned H7725 unto H5704 me, saith H5002 the LORD H3068 .
|
11. “நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல், உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன். நீங்கள் நெருப்பினின்று இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல் இருந்தீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
11. I have overthrown H2015 some of you , as God H430 overthrew H4114 H853 Sodom H5467 and Gomorrah H6017 , and ye were H1961 as a firebrand H181 plucked H5337 out of the burning H4480 H8316 : yet have ye not H3808 returned H7725 unto H5704 me, saith H5002 the LORD H3068 .
|
12. “ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே; இதை நான் செய்யப்போவதால், இஸ்ரயேலே, உன் இறைவனை நீ சந்திக்க ஆயத்தப்படு.”
|
12. Therefore H3651 thus H3541 will I do H6213 unto thee , O Israel H3478 : and because H6118 H3588 I will do H6213 this H2063 unto thee, prepare H3559 to meet H7125 thy God H430 , O Israel H3478 .
|
13. மலைகளை உருவாக்குகிறவரும், காற்றை உண்டாக்குகிறவரும் அவரே, மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே, பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே, சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர். PE
|
13. For H3588 , lo H2009 , he that formeth H3335 the mountains H2022 , and createth H1254 the wind H7307 , and declareth H5046 unto man H120 what H4100 is his thought H7808 , that maketh H6213 the morning H7837 darkness H5890 , and treadeth H1869 upon H5921 the high places H1116 of the earth H776 , The LORD H3068 , The God H430 of hosts H6635 , is his name H8034 .
|