Bible Versions
Bible Books

:

1. {இயேசு முடக்குவாதக்காரனைச் சுகப்படுத்துதல்} PS இயேசு ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார்.
1. And G2532 he entered G1684 into G1519 a ship G4143 , and passed over G1276 , and G2532 came G2064 into G1519 his own G2398 city G4172 .
2. அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே, அவரிடம் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, தைரியமாயிரு; உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார். PEPS
2. And G2532 , behold G2400 , they brought G4374 to him G846 a man sick of the palsy G3885 , lying G906 on G1909 a bed G2825 : and G2532 Jesus G2424 seeing G1492 their G846 faith G4102 said G2036 unto the G3588 sick of the palsy G3885 ; Son G5043 , be of good cheer G2293 ; thy G4675 sins G266 be forgiven G863 thee G4671 .
3. இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், “இவன் இறைவனை நிந்திக்கிறான்!” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். PEPS
3. And G2532 , behold G2400 , certain G5100 of the G3588 scribes G1122 said G2036 within G1722 themselves G1438 , This G3778 man blasphemeth G987 .
4. அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்?
4. And G2532 Jesus G2424 knowing G1492 their G846 thoughts G1761 said G2036 , Wherefore G2444 think G1760 ye G5210 evil G4190 in G1722 your G5216 hearts G2588 ?
5. ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
5. For G1063 whether G5101 is G2076 easier G2123 , to say G2036 , Thy sins G266 be forgiven G863 thee G4671 ; or G2228 to say G2036 , Arise G1453 , and G2532 walk G4043 ?
6. ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சொல்லி, பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
6. But G1161 that G2443 ye may know G1492 that G3754 the G3588 Son G5207 of man G444 hath G2192 power G1849 on G1909 earth G1093 to forgive G863 sins G266 , ( then G5119 saith G3004 he to the G3588 sick of the palsy G3885 ,) Arise G1453 , take up G142 thy G4675 bed G2825 , and G2532 go G5217 unto G1519 thine G4675 house G3624 .
7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
7. And G2532 he arose G1453 , and departed G565 to G1519 his G848 house G3624 .
8. மக்கள் கூட்டம் இதைக் கண்டபோது, இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்கு அளித்த இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள். PS
8. But G1161 when the G3588 multitudes G3793 saw G1492 it, they marveled G2296 , and G2532 glorified G1392 God G2316 , which had given G1325 such G5108 power G1849 unto men G444 .
9. {மத்தேயு அழைக்கப்படுதல்} PS இயேசு அங்கிருந்து போகும்போது, மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான். PEPS
9. And G2532 as Jesus G2424 passed forth G3855 from thence G1564 , he saw G1492 a man G444 , named G3004 Matthew G3156 , sitting G2521 at G1909 the G3588 receipt of custom G5058 : and G2532 he saith G3004 unto him G846 , Follow G190 me. And G2532 he G3427 arose G450 , and followed G190 him G846 .
10. பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் அநேகர் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள்.
10. And G2532 it came to pass G1096 , as Jesus G846 sat at meat G345 in G1722 the G3588 house G3614 , behold G2400 , many G4183 publicans G5057 and G2532 sinners G268 came G2064 and sat down G4873 with him G2424 and G2532 his G846 disciples G3101 .
11. இதைப் பரிசேயர் கண்டபோது, அவரது சீடர்களிடம், “ஏன் உங்கள் போதகர் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள். PEPS
11. And G2532 when the G3588 Pharisees G5330 saw G1492 it, they said G2036 unto his G846 disciples G3101 , Why G1302 eateth G2068 your G5216 Master G1320 with G3326 publicans G5057 and G2532 sinners G268 ?
12. இதைக் கேட்டபோது இயேசு, “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார்.
12. But G1161 when Jesus G2424 heard G191 that, he said G2036 unto them G846 , They that be whole G2480 need G2192 G5532 not G3756 a physician G2395 , but G235 they that are sick G2192 G2560 .
13. மேலும் அவர், “ ‘நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ *ஓசி. 6:6 என்ற இறைவாக்கின் கருத்து என்னவென்று, போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார். PS
13. But G1161 go G4198 ye and learn G3129 what G5101 that meaneth G2076 , I will G2309 have mercy G1656 , and G2532 not G3756 sacrifice G2378 : for G1063 I am not G3756 come G2064 to call G2564 the righteous G1342 , but G235 sinners G268 to G1519 repentance G3341 .
14. {உபவாசத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி} PS அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நாங்களும், பரிசேயரும் உபவாசிக்கிறோம். ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். PEPS
14. Then G5119 came G4334 to him G846 the G3588 disciples G3101 of John G2491 , saying G3004 , Why G1302 do we G2249 and G2532 the G3588 Pharisees G5330 fast G3522 oft G4183 , but G1161 thy G4675 disciples G3101 fast G3522 not G3756 ?
15. அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி? மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள்” என்று சொன்னார். PEPS
15. And G2532 Jesus G2424 said G2036 unto them G846 , Can G1410 G3361 the G3588 children G5207 of the G3588 bridechamber G3567 mourn G3996 , as long as G1909 G3745 the G3588 bridegroom G3566 is G2076 with G3326 them G846 ? but G1161 the days G2250 will come G2064 , when G3752 the G3588 bridegroom G3566 shall be taken G522 from G575 them G846 , and G2532 then G5119 shall they fast G3522 .
16. “ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும்.
16. G1161 No man G3762 putteth G1911 a piece G1915 of new G46 cloth G4470 unto G1909 an old G3820 garment G2440 , for G1063 that which is put in to fill it up G4138 G846 taketh G142 from G575 the G3588 garment G2440 , and G2532 the rent G4978 is G1096 made worse G5501 .
17. மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படி செய்தால், தோல் பைகள் வெடித்து விடும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்” என்றார். PS
17. Neither G3761 do men put G906 new G3501 wine G3631 into G1519 old G3820 bottles G779 : else G1490 the G3588 bottles G779 break G4486 , and G2532 the G3588 wine G3631 runneth out G1632 , and G2532 the G3588 bottles G779 perish G622 : but G235 they put G906 new G3501 wine G3631 into G1519 new G2537 bottles G779 , and G2532 both G297 are preserved G4933 .
18. {இறந்த மகளும் வியாதியான பெண்ணும்} PS இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு, அவரிடம், “எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் உயிர் பெறுவாள்” என்று சொன்னான்.
18. While he G846 spake G2980 these things G5023 unto them G846 , behold G2400 , there came G2064 a certain G1520 ruler G758 , and G2532 worshiped G4352 him G846 , saying G3004 , My G3450 daughter G2364 is even now dead G5053 G737 : but G235 come G2064 and G2532 lay G2007 thy G4675 hand G5495 upon G1909 her G846 , and G2532 she shall live G2198 .
19. இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார். இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள். PEPS
19. And G2532 Jesus G2424 arose G1453 , and followed G190 him G846 , and G2532 so did his G846 disciples G3101 .
20. அவ்வேளையில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண், இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள்.
20. And G2532 , behold G2400 , a woman G1135 , which was diseased with an issue of blood G131 twelve G1427 years G2094 , came G4334 behind G3693 him, and touched G680 the G3588 hem G2899 of his G846 garment G2440 :
21. அவள், “நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும். குணமடைவேன்” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். PEPS
21. For G1063 she said G3004 within G1722 herself G1438 , If G1437 I may but G3440 touch G680 his G846 garment G2440 , I shall be whole G4982 .
22. இயேசு அவளை திரும்பிப்பார்த்து, “மகளே, தைரியமாயிரு; உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது” என்றார். அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள். PEPS
22. But G1161 Jesus G2424 turned him about G1994 , and G2532 when he saw G1492 her G846 , he said G2036 , Daughter G2364 , be of good comfort G2293 ; thy G4675 faith G4102 hath made thee whole G4982 G4571 . And G2532 the G3588 woman G1135 was made whole G4982 from G575 that G1565 hour G5610 .
23. பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும், கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார்.
23. And G2532 when Jesus G2424 came G2064 into G1519 the G3588 ruler G758 's house G3614 , and G2532 saw G1492 the G3588 minstrels G834 and G2532 the G3588 people G3793 making a noise G2350 ,
24. இயேசு அவர்களிடம், “வெளியே போங்கள். இந்த சிறுமி சாகவில்லை, அவள் தூங்குகிறாள்” என்றார். அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள்.
24. He said G3004 unto them G846 , Give place G402 : for G1063 the G3588 maid G2877 is not dead G599 G3756 , but G235 sleepeth G2518 . And G2532 they laughed him to scorn G2606 G846 .
25. மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின், இயேசு உள்ளேப் போய், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார், அவள் உடனே எழுந்திருந்தாள்.
25. But G1161 when G3753 the G3588 people G3793 were put forth G1544 , he went in G1525 , and took G2902 her G846 by the G3588 hand G5495 , and G2532 the G3588 maid G2877 arose G1453 .
26. இச்செய்தி, அப்பகுதிகள் எங்கும் பரவியது. PS
26. And G2532 the G3588 fame G5345 hereof G3778 went abroad G1831 into G1519 all G3650 that G1565 land G1093 .
27. {இயேசு குருடரையும் ஊமையனையும் குணமாக்குதல்} PS இயேசு அங்கிருந்து போகும்போது, இரண்டு பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று, “தாவீதின் மகனே! எங்கள்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமிட்டார்கள். PEPS
27. And G2532 when Jesus G2424 departed G3855 thence G1564 , two G1417 blind men G5185 followed G190 him G846 , crying G2896 , and G2532 saying G3004 , Thou son G5207 of David G1138 , have mercy G1653 on us G2248 .
28. அவர் வீட்டிற்குள் சென்றபோது, அந்த பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள். இயேசு அவர்களிடம், “என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” எனக் கேட்டார். PEPS “ஆம் ஆண்டவரே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள். PEPS
28. And G1161 when he was come G2064 into G1519 the G3588 house G3614 , the G3588 blind men G5185 came G4334 to him G846 : and G2532 Jesus G2424 saith G3004 unto them G846 , Believe G4100 ye that G3754 I am able G1410 to do G4160 this? They G5124 said G3004 unto him G846 , Yea G3483 , Lord G2962 .
29. பின்பு இயேசு, அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும்” என்றார்.
29. Then G5119 touched G680 he their G846 eyes G3788 , saying G3004 , According G2596 to your G5216 faith G4102 be it G1096 unto you G5213 .
30. உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது. இயேசு அவர்களிடம், “இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் கடுமையாக எச்சரித்தார்.
30. And G2532 their G846 eyes G3788 were opened G455 ; and G2532 Jesus G2424 straitly charged G1690 them G846 , saying G3004 , See G3708 that no man G3367 know G1097 it.
31. ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள். PEPS
31. But G1161 they G3588 , when they were departed G1831 , spread abroad his fame G1310 G846 in G1722 all G3650 that G1565 country G1093 .
32. அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
32. As G1161 they G846 went out G1831 , behold G2400 , they brought G4374 to him G846 a dumb G2974 man G444 possessed with a devil G1139 .
33. அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள். PEPS
33. And G2532 when the G3588 devil G1140 was cast out G1544 , the G3588 dumb G2974 spake G2980 : and G2532 the G3588 multitudes G3793 marveled G2296 , saying G3004 , It was never G3763 so G3779 seen G5316 in G1722 Israel G2474 .
34. ஆனால் பரிசேயரோ, “பிசாசுகளின் தலைவனாலேயே, இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். PS
34. But G1161 the G3588 Pharisees G5330 said G3004 , He casteth out G1544 devils G1140 through G1722 the G3588 prince G758 of the G3588 devils G1140 .
35. {வேலையாட்கள் குறைவு} PS இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் நடந்துபோய், அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும், நோய்களையும் குணமாக்கினார்.
35. And G2532 Jesus G2424 went about G4013 all G3956 the G3588 cities G4172 and G2532 villages G2968 , teaching G1321 in G1722 their G846 synagogues G4864 , and G2532 preaching G2784 the G3588 gospel G2098 of the G3588 kingdom G932 , and G2532 healing G2323 every G3956 sickness G3554 and G2532 every G3956 disease G3119 among G1722 the G3588 people G2992 .
36. அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது, அவர்கள்மேல் மனதுருகினார். ஏனெனில் அவர்கள், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு, உதவியற்றவர்களாக இருந்தார்கள்.
36. But G1161 when he saw G1492 the G3588 multitudes G3793 , he was moved with compassion G4697 on G4012 them G846 , because G3754 they fainted G2258 G1590 , and G2532 were scattered abroad G4496 , as G5616 sheep G4263 having G2192 no G3361 shepherd G4166 .
37. அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ, கொஞ்சமாய் இருக்கிறார்கள்.
37. Then G5119 saith G3004 he unto his G848 disciples G3101 , The G3588 harvest G2326 truly G3303 is plenteous G4183 , but G1161 the G3588 laborers G2040 are few G3641 ;
38. ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். PE
38. Pray G1189 ye therefore G3767 the G3588 Lord G2962 of the G3588 harvest G2326 , that G3704 he will send forth G1544 laborers G2040 into G1519 his G848 harvest G2326 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×