|
|
1. பின்னர் ஆண்டவர் தமது அருள்வாக்கின் படி சாறாளை நினைவு கூர்ந்து, தமது திருவாக்கு அவளிடம் நிறைவேறச் செய்தார்.
|
1. And the LORD H3068 visited H6485 H853 Sarah H8283 as H834 he had said H559 , and the LORD H3068 did H6213 unto Sarah H8283 as H834 he had spoken H1696 .
|
2. அவள் தன் முதிர்ந்த வயதில் கருத் தாங்கி, கடவுள் முன் குறித்திருந்த காலத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள்.
|
2. For Sarah H8283 conceived H2029 , and bore H3205 Abraham H85 a son H1121 in his old age H2208 , at the set time H4150 of which H834 God H430 had spoken H1696 to him.
|
3. ஆபிரகாம் சாறாளிடம் பெற்ற புதல்வனுக்கு ஈசாக் எனப் பெயரிட்டார்.
|
3. And Abraham H85 called H7121 H853 the name H8034 of his son H1121 that was born H3205 unto him, whom H834 Sarah H8283 bore H3205 to him, Isaac H3327 .
|
4. பின் கடவுள் கட்டளைப்படி ஆபிரகாம் எட்டாம் நாளிலே குழந்தைக்கு விருத்த சேதனம் செய்தார்.
|
4. And Abraham H85 circumcised H4135 his son H1121 Isaac H3327 being eight H8083 days H3117 old H1121 , as H834 God H430 had commanded H6680 him.
|
5. அப்பொழுது அவருக்கு நூறு வயது. அத்தனை வயதுள்ள தந்தைக்கே ஈசாக்கு பிறந்தான்.
|
5. And Abraham H85 was a hundred H3967 years H8141 old H1121 , when H853 his son H1121 Isaac H3327 was born H3205 unto him.
|
6. அப்பொழுது சாறாள்: கடவுள் எனக்கு மகிழ்ச்சி அளித்தார் என்றும், இதைக் கேட்கிற யாவரும் என்னோடு சேர்ந்து மகிழ்வார்கள் என்றும் சொன்னாள்.
|
6. And Sarah H8283 said H559 , God H430 hath made H6213 me to laugh H6712 , so that all H3605 that hear H8085 will laugh H6711 with me.
|
7. மீண்டும்: முதிர் வயதுள்ள ஆபிரகாமுக்குச் சாறாள் ஒரு புதல்வனைப் பெற்றாளாம்! அதற்குப் பாலூட்டி வருகிறாளாம்! இத்தகைய செய்தியை ஆபிரகாம் என்றாவது ஒரு நாள் கேள்விப்படுவாரென்று யார் தான் நினைத்திருக்கக் கூடும் என்றும் சாறாள் சொன்னாள்.
|
7. And she said H559 , Who H4310 would have said H4448 unto Abraham H85 , that Sarah H8283 should have given children suck H3243 H1121 ? for H3588 I have born H3205 him a son H1121 in his old age H2208 .
|
8. அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடியும் மறந்தது. அப்படிப் பால்குடி மறந்த நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து செய்தார்.
|
8. And the child H3206 grew H1431 , and was weaned H1580 : and Abraham H85 made H6213 a great H1419 feast H4960 the same day H3117 that H853 Isaac H3327 was weaned H1580 .
|
9. (பின் ஒரு நாள்) எகிப்து நாட்டினளான ஆகாரின் புதல்வன், சாறாள் புதல்வனான ஈசாக்கோடு கேலி பண்ணி விளையாடுவதைச் சாறாள் கண்டு, ஆபிரகாமை நோக்கி:
|
9. And Sarah H8283 saw H7200 H853 the son H1121 of Hagar H1904 the Egyptian H4713 , which H834 she had born H3205 unto Abraham H85 , mocking H6711 .
|
10. இந்த வேலைக்காரியையும் அவள் புதல்வனையும் துரத்தி விட வேண்டும். ஏனென்றால், வேலைக்காரியின் மகன் என் மகன் ஈசாக்கோடு பங்காளியாய் இருக்கக் கூடாது என்றாள்.
|
10. Wherefore she said H559 unto Abraham H85 , Cast out H1644 this H2063 bondwoman H519 and her son H1121 : for H3588 the son H1121 of this H2063 bondwoman H519 shall not H3808 be heir H3423 with H5973 my son H1121 , even with H5973 Isaac H3327 .
|
11. தன் மகன் இஸ்மாயிலைப் பற்றிச் சாறாள் சொன்ன வார்த்தையைக் கேட்டு ஆபிரகாம் வருத்தமுற்றார்.
|
11. And the thing H1697 was very grievous H7489 H3966 in Abraham H85 's sight H5869 because H5921 H182 of his son H1121 .
|
12. அப்போது கடவுள் அவரை நோக்கி: பையனையும் வேலைக்காரியையும் பொறுத்த வரையில் அது கொடுமையென்று எண்ணாதே. சாறாள் உனக்குச் சொல்வதையெல்லாம் கேட்டு நட. ஏனென்றால் ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்.
|
12. And God H430 said H559 unto H413 Abraham H85 , Let it not H408 be grievous H7489 in thy sight H5869 because of H5921 the lad H5288 , and because of H5921 thy bondwoman H519 ; in all H3605 that H834 Sarah H8283 hath said H559 unto H413 thee, hearken H8085 unto her voice H6963 ; for H3588 in Isaac H3327 shall thy seed H2233 be called H7121 .
|
13. உன் வேலைக்காரியின் மகனும் உன் வித்தானதனால், அவனையும் ஒரு பெரிய இனத்துக்குத் தலைவனாக்குவோம் என்றார்.
|
13. And also H1571 H853 of the son H1121 of the bondwoman H519 will I make H7760 a nation H1471 , because H3588 he H1931 is thy seed H2233 .
|
14. ஆபிரகாம் இதைக் கேட்டு, காலையில் எழுந்து, ஓர் அப்பத்தையும், தண்ணீர் நிறைந்த ஒரு தோல் பையையும் அவள் தோளில் சுமத்தி, பையனையும் அவளிடம் ஒப்புவித்து அவளை அனுப்பிவிட்டார். அவள் புறப்பட்டுப் போய்ப் பெற்சபே என்னும் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.
|
14. And Abraham H85 rose up early H7925 in the morning H1242 , and took H3947 bread H3899 , and a bottle H2573 of water H4325 , and gave H5414 it unto H413 Hagar H1904 , putting H7760 it on H5921 her shoulder H7926 , and the child H3206 , and sent her away H7971 : and she departed H1980 , and wandered H8582 in the wilderness H4057 of Beer H884 -sheba.
|
15. தோல் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்த பின் அவள் அவ்விடத்துள்ள மரங்களில் ஒன்றின் அடியில் பையனைக் கிடத்திய பின்,
|
15. And the water H4325 was spent H3615 in H4480 the bottle H2573 , and she cast H7993 H853 the child H3206 under H8478 one H259 of the shrubs H7880 .
|
16. அம்பு எறி தூரத்திற்கும் அதிகமாகச் சென்று அங்கே எதிர் நோக்கி உட்கார்ந்தாள்: குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் என்று, தான் அமர்ந்திருந்த இடத்திலேயே கூக்குரலிட்டு அழுதாள். அப்போது கடவுள் குழந்தையின் குரலை நன்றாகக் கேட்டருளினதால், ஆண்டவருடைய தூதர் ஒருவர் வானத்தினின்று ஆகாரைக் சுப்பிட்டு:
|
16. And she went H1980 , and sat her down H3427 over against H4480 H5048 him a good way off H7368 , as it were a bowshot H2909 H7198 : for H3588 she said H559 , Let me not H408 see H7200 the death H4194 of the child H3206 . And she sat H3427 over against H4480 H5048 him , and lifted up H5375 H853 her voice H6963 , and wept H1058 .
|
17. ஆகாரே, உன்னை வருத்துவது யாது? பயப்படாதே. ஏனென்றால், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையன் இட்ட சத்தத்தைக் கடவுள் நன்றானக் கேட்டருளினார்.
|
17. And God H430 heard H8085 H853 the voice H6963 of the lad H5288 ; and the angel H4397 of God H430 called H7121 to H413 Hagar H1904 out of H4480 heaven H8064 , and said H559 unto her, What H4100 aileth thee, Hagar H1904 ? fear H3372 not H408 ; for H3588 God H430 hath heard H8085 H413 the voice H6963 of the lad H5288 where H834 H8033 he H1931 is .
|
18. நீ எழுந்து பையனைத் தூக்கியெடுத்து அதன் கையைப் பிடி. ஏனென்னால், அவளை ஒரு பெரிய இனத்திற்குத் தந்தையாக்குவோம் என்றார்.
|
18. Arise H6965 , lift up H5375 H853 the lad H5288 , and hold H2388 him in H854 thine hand H3027 ; for H3588 I will make H7760 him a great H1419 nation H1471 .
|
19. அந்நேரத்திலே கடவுள் அவள் கண்களைத் திறந்து விட, அவள் ஒரு தண்ணீர்க் கிணற்றைக் கண்டாள்; அவ்விடம் சென்று தோல் பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
|
19. And God H430 opened H6491 H853 her eyes H5869 , and she saw H7200 a well H875 of water H4325 ; and she went H1980 , and filled H4390 H853 the bottle H2573 with water H4325 , and gave H853 the lad H5288 drink H8248 .
|
20. கடவுள் அவனோடு இருந்தார். ஆதலால் அவன் வளர்ந்து, பாலைவனத்தில் அலைந்து திரிந்து, வில்வித்தையில் கைதேர்ந்தவனானான்.
|
20. And God H430 was H1961 with H854 the lad H5288 ; and he grew H1431 , and dwelt H3427 in the wilderness H4057 , and became H1961 an archer H7235 H7199 .
|
21. அவன் பரான் என்னும் பாலைவனத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டினின்று ஒரு பெண்ணைக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.
|
21. And he dwelt H3427 in the wilderness H4057 of Paran H6290 : and his mother H517 took H3947 him a wife H802 out of the land H4480 H776 of Egypt H4714 .
|
22. அக்காலத்தில் அபிமெலெக் தன் படைத் தலைவனாகிய பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி: நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.
|
22. And it came to pass H1961 at that H1931 time H6256 , that Abimelech H40 and Phichol H6369 the chief captain H8269 of his host H6635 spoke H559 unto H413 Abraham H85 , saying H559 , God H430 is with H5973 thee in all H3605 that H834 thou H859 doest H6213 :
|
23. ஆகையால், எனக்கும் என் சந்ததியாருக்கும் என் இனத்தாருக்கும் நீர் எவ்விதத் தீமையும் செய்யாமல், உமக்கு நான் கருணை காட்டி வந்துள்ளதுபோல நீரும் என் மீதும், நீர் அந்நியனாய் வாழ்ந்து வந்த இந்த நாட்டின் மீதும் தயவுள்ளவராய் இருப்பதாகக் கடவுள் பெயராலே ஆணையிடுவீர் என்றான்.
|
23. Now H6258 therefore swear H7650 unto me here H2008 by God H430 that thou wilt not deal falsely H8266 with me , nor with my son H5209 , nor with my son's son H5220 : but according to the kindness H2617 that H834 I have done H6213 unto H5973 thee , thou shalt do H6213 unto H5978 me , and to H5973 the land H776 wherein H834 thou hast sojourned H1481 .
|
24. அதற்கு, ஆபிரகாம்: அவ்விதமே ஆணையிடுகிறேன் என்று கூறினார்.
|
24. And Abraham H85 said H559 , I H595 will swear H7650 .
|
25. பிறகு அபிமெலெக்கின் ஊழியர்கள் வலுக்கட்டாயமாய்க் கைப்பற்றியிருந்த ஒரு கிணற்றைப் பற்றி அவனிடம் முறையிட்டார்கள்.
|
25. And Abraham H85 reproved H3198 H853 Abimelech H40 because of H5921 H182 a well H875 of water H4325 , which H834 Abimelech H40 's servants H5650 had violently taken away H1497 .
|
26. அபிமெலெக் அதற்கு மறுமொழியாக: அந்த அநியாயத்தைச் செய்தவர் யாரென்று எனக்கும் தெரியாமல் இருந்தது; நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்று தான் முதல் தடவையாக நான் அதைக் கேள்விப்படுகிறேன் என்றான்.
|
26. And Abimelech H40 said H559 , I know H3045 not H3808 who H4310 hath done H6213 H853 this H2088 thing H1697 : neither H3808 didst thou H859 tell H5046 me, neither H3808 yet H1571 heard H8085 I H595 of it , but H1115 today H3117 .
|
27. பின் ஆபிரகாம் ஆடுமாடுகளை அபிமெலக்கிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
|
27. And Abraham H85 took H3947 sheep H6629 and oxen H1241 , and gave H5414 them unto Abimelech H40 ; and both H8147 of them made H3772 a covenant H1285 .
|
28. அப்பொழுது, ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக் குட்டிகளைத் தனியாகப் பிரித்து நிறுத்தினார்.
|
28. And Abraham H85 set H5324 H853 seven H7651 ewe lambs H3535 of the flock H6629 by themselves H905 .
|
29. அபிமெலெக் அவரை நோக்கி: நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தி வைப்பானேன்? இதன் காரணம் என்ன? என்று கேட்க, அவர்:
|
29. And Abimelech H40 said H559 unto H413 Abraham H85 , What H4100 mean these H428 seven H7651 ewe lambs H3535 which H834 thou hast set H5324 by themselves H905 ?
|
30. நீர் இப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளக் கடவீர்; நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்கு இவை எனக்குச் சாட்சியாய் இருக்கும் என்றார்.
|
30. And he said H559 , For H3588 these H853 seven H7651 ewe lambs H3535 shalt thou take H3947 of my hand H4480 H3027 , that H5668 they may be H1961 a witness H5713 unto me, that H3588 I have digged H2658 H853 this H2088 well H875 .
|
31. அதன் காரணமாக அந்த இடம் பெற்சபே என்று அழைக்கப்பட்டது: ஏனென்றால், அவ்விடத்தில் இருவரும் சத்தியம் பண்ணினார்கள்.
|
31. Wherefore H5921 H3651 he called H7121 that H1931 place H4725 Beer H884 -sheba; because H3588 there H8033 they swore H7650 both H8147 of them.
|
32. அவர்கள் சத்தியம் பண்ணின அக்கிணற்றைக் குறித்தே உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலெக்கும் அவன் படைத் தலைவனாகிய பிக்கோலும் எழுந்து பிலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.
|
32. Thus they made H3772 a covenant H1285 at Beer H884 -sheba : then Abimelech H40 rose up H6965 , and Phichol H6369 the chief captain H8269 of his host H6635 , and they returned H7725 into H413 the land H776 of the Philistines H6430 .
|
33. ஆபிரகாமோ, பெற்சபேயில் ஒரு சோலையை உண்டாக்கி, அங்கு நித்திய கடவுளாகிய ஆண்டவரின் திருப் பெயரை வணங்கிப் போற்றினார்.
|
33. And Abraham planted H5193 a grove H815 in Beer H884 -sheba , and called H7121 there H8033 on the name H8034 of the LORD H3068 , the everlasting H5769 God H410 .
|
34. அவர் பிலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.
|
34. And Abraham H85 sojourned H1481 in the Philistines H6430 ' land H776 many H7227 days H3117 .
|